ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் 5 பேருக்கு சம்மன் !விசாரணை ஆணையம் அதிரடி ….
ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன். பூங்குன்றன் வரும் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு.
அப்பலோவில் ஜெயலலிதாவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம்தொடர் விசாரணை.விசாரணையில் சிகிச்சை முறைகள், பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்து கேட்டறிவதாக தகவல். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது .எனவே பூங்குன்றன் வரும் 9ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது .
மேலும் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனில் சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் எட்டாம் தேதி டாக்டர் சிவக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மற்றும் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமிக்கும் விசாரணை ஆணையம் சம்மன் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியான பெருமாள் சாமி வரும் 10ந் தேதி நேரில் ஆஜராக சம்மன்
ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பாலாஜி மீண்டும் வரும் 11ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதனுக்கும் சம்மன்.எனவே டாக்டர் சுவாமிநாதன் வரும் 12ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது …..
source: dinasuvadu.com