டி 20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த காலின் அக்கர்மேன்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டி 20 கிரிக்கெட் தொடரில் லீசெஷ்டர் -பர்மிங்காம் பீர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய லீசெஷ்டர் அணி 6 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.பின்னர் 190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பர்மிங்காம் பீர்ஸ் அணி 134 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
லீசெஷ்டர் அணியை சார்ந்த தென்னாபிரிக்கா பகுதிநேர சுழல்பந்து வீச்சாளர் காலின் அக்கர்மேன் 4 ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 7 விக்கெட்டை பறித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 11 ஆம் ஆண்டு சோமர்செட் அணிக்காக களம் இறங்கிய மலேசியாவைச் சார்ந்த அருள் சுப்பையா 5 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதனையாக இருந்தது. டி 20 போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட பந்துவீச்சாளர்கள் 6 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆனால் 7 விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல் முறை.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025