வரலாற்றில் இன்று பார்வையற்றோருக்கு கல்விக் கண் திறந்த லூயி பிரெய்லி பிறந்த தினம்…!!

Default Image

ஜனவரி, 4, 1809, லூயி பிரெய்லி பிறந்த தினம்:
பார்வையற்றோருக்கு கல்விக் கண் திறந்த லூயி பிரெய்லி பிறந்த தினம் இன்று. 1809 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த இவர், சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக தன் கண்பார்வையை இழந்தார்.
பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக ஒரு முறையை உருவாக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை பிரெய்லிக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நைட் ரைட்டிங் என்னும் முறை பிரெய்லிக்கு உதவிகரமாக அமைந்தது.
இம்முறையைப் பயன்படுத்தி 1829 ஆம் ஆண்டு ஒன்று முதல் ஆறு புடைப்புள்ளிகளை கொண்டு எழுதும் புதிய முறையை உருவாக்கினார்.
பார்வையற்றோரின் விரல்களையே கண்களாக மாற்றியமைத்த ஒரு மொழியை லூயி பிரெய்ல் உருவாக்கினார். அதுவே லட்சக்கணக்கானோருக்கு ஞானப்பார்வை அளித்துக்கொண்டு இருக்கிறது.
லூயி பிரெய்ல் கண்டறிந்த இந்த மொழி ஒட்டுமொத்த உலகிலும் இருக்கும் பார்வையற்ற அனைவருக்கும் வரமாக அமைந்துவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்