திடீர் திருப்பம் !3 மணி நேரத்திற்கு பின்னர் திமுக முன்னிலை -விவரம் இதோ
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலையில் தபால் ஒட்டு எண்ணப்பட்ட முதல் அதிமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது அதன் பின்பு ஏசி.சண்முகமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதனிடையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 2,56,633 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 2,64,140 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி – 13539 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 7,507 வாக்குகள் ஆகும்.