தொடர் மழையால் முதல் ஒருநாள் போட்டி ரத்து !
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.நேற்று முதல் ஒருநாள் போட்டியில் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் 2 மணிநேரம் டாஸ் போடுவதற்கு தாமதம் ஆனது.
மழை காரணமாக போட்டி 43 ஓவராக மாற்றப்பட்டு பின்னர் டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் , எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கிறிஸ் கெய்ல் 4 ரன்னில் வெளியேறினர்.பின்னர் ஷாய் ஹோப் களமிறங்கினர். அதிரடியாகவும் ,சிறப்பாகவும் விளையாடிய எவின் லூயிஸ் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 13-வது முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. களத்தில் ஷாய் ஹோப் 6 , எவின் லூயிஸ் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த இரு அணிகளுக்கான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.