மீண்டும் விண்ணில் பறக்கும் கிங்!!
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானத்தை, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் 21 போர் விமானத்தின் மூலம் தாக்கி வீழ்த்தினார்.
அப்பொழுது நடந்த நடந்த தாக்குதலில், அவரின் விமானமும் பாதிப்படைந்தது. பாராச்சூட் மூலம் அவர் பாக்கிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். அங்கிருந்து மத்திய அமைச்சகம் உதவியுடன் இந்தியா திரும்பினார்.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவரை பணிக்கு திரும்ப இந்திய விமானப்படை அனுமதி அளித்தது. இந்நிலையில், நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு அவர் விமானப்படையில் விமானியாக பணியாற்றவுள்ளார்