ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் பிரதமர் மோடி வாக்குறுதி !

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது வரலாற்று வாய்ந்த சிறப்பு முடிவு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த 5  ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.  இது தொடர்பாக தற்போது நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரித்து இருப்பது மூலம் இனி வளர்ச்சி மிக்க நகரங்களாக உருவாகும் என்று கூறி இருக்கிறார். மேலும் பயங்கரவாதிகளுக்கு இனி எப்போதும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இடம் இல்லை என்றும் மோடி கூறி இருக்கிறார்.

மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை கண்டு ஜம்மு காஷ்மீர் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் மோடி கூறி இருக்கிறார். மேலும், நம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் மோடி கூறி இருக்கிறார்.