எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள்?நான் என்ன தப்பு செய்தேன்?அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் கேள்வி
எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள் என்றும் தெரிவியவில்லை என்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் வினவியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் மாளிகை மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது.மேலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்னரும் அமைச்சர் ஒருவர் நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன்.பரமக்குடி சட்டமன்ற தொகுதியை கூட சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறச் செய்துள்ளோம்.எதற்காக இப்படி செய்தார்கள்? என்ன காரணம் என்றும் தெரியவில்லை.ஆட்சியில் அமைச்சராக இருந்திருக்கிறேன்,படித்தவர்கள் அமைச்சராக இருக்கிறோம்,நன்றாக வேலை செய்கிறோம்.மக்களுடன் கலந்து ஆலோசித்து வங்கித் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சுமூகமாக முடித்துள்ளோம்.எந்த பிரச்சினை இல்லாமல் முடித்துளோம்.இந்த அறிவிப்பு என்னெவற்றும் தெரியவில்லை.எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள் என்றும் தெரிவியவில்லை.நான் என்ன தப்பு செய்தேன் என்றும் தெரியவில்லை.வேலூர் தேர்தலில் கூட சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.எந்த விஷயமும் செய்யவில்லை,ஒரு சிறு தவறு கூட செய்யவில்லை.எதற்காக இப்படி செய்தார்கள் என்றும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் மணிகண்டன்.