15 வயது சிறுமிக்கு காதல் வலையை வீசிய திருமணமான இளைஞர்! இறுதியில் அரங்கேறிய விபரீதம்!
திருச்சி மாவட்டம், திம்மராய சமுத்திரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மணிகண்டன் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் அண்ணன்மார், மணிகண்டனை எச்சரித்துள்ளனர். அதனை கண்டுகொள்ளாத மணிகண்டன், தொடர்ந்து சிறுமியுடன் தனிமையில் பேசுவதை வழக்கமாக்கி வந்துள்ளார்.
இதனையடுத்து, புதன்கிழமை மாலை சிறுமியையும், மணிகண்டனையும் அங்குள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலின் அருகே, சிறுமியின் அண்ணன்மார் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இவர்கள், அவர்களது நண்பர்களுடன் இணைந்து இரும்புக்கம்பி, அரிவாள் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்க முற்பட்டுள்ளனர்.
இதனை கண்டு பயந்த மணிகண்டன், அடகு கடை ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். மணிகண்டனை வளைத்து பிடித்த, சிறுமியின் அண்ணன்மார் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மணிகண்டனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பி ஓடிய அந்த நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.