துப்பாக்கி சூடு நடந்ததால் மட்டும் ஆலை மூடப்படவில்லை! ஸ்டெர்லைட்டிற்கு எதிராக அரசு கடுமையான வாதம்!
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் பெரிதாகி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதற்க்கு எதிராக, ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக சுற்று சூழல் துறை, வனத்துறை மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் என ஒவ்வொரு தரப்பும் தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று, உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவனி சுப்ராயன் ஆகியோர் தலைமையில், விசாரணை நடைபெற்றது. சுற்றுசூழல் துறை மற்றும் வனத்துறை சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் விஸ்வநாதன் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அதில்,
- துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவில்லை. தொழிற்சாலையினால் ஏற்பட்ட மாசுபாடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
- இதே போல மற்ற ஆலைகளும் தமிழகத்தில் இயங்குவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறுவது தவறானது. தமிழகத்தில் இருக்கும் ஒரே தாமிர உருக்காலை ஸ்டெர்லைட் மட்டுமே.
- அந்த அலையால் சுற்று சூழல் மாசு அதிகமானதால் மட்டுமே உச்சநீதிமன்றம் 100 கோடி அபராதம் விதித்து இருந்தது குரிப்பிடத்தக்கது. மேலும் இதே போல சுற்றுசூழல் மாசு அதிகரித்தால் ஆலை மூடப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது என குறிப்பிட்டார்.
இந்த வாதங்களை ஏற்று வழக்கை அடுத்த வியாழன் அன்று ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.