கடைசி நாளான 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து -மாவட்ட ஆட்சியர் !

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் 31 தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அத்திவரதர் தரிசனம் வரும் 16-ம் தேதி இரவுடன் நிறைவுபெறும் எனவும் கடைசி நாளான 17-ம் தேதி தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்து உள்ளார்.
அத்திவரதரை குளத்தில் வைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாலும் , ஆகம விதிப்படி சடங்குகள் செய்வதாலும் 17-ம் தேதி தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்து உள்ளார்.
கடந்த சில நாள்களாக அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வருகை தினமும் 3 லட்சமாக உள்ளது. ஒரே நாளில் அதிகப்பட்சமாக 3.70 லட்சம் பேர் தரிசனம் செய்து உள்ளனர். கடந்த 38 நாள்களாக 70.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025