காஷ்மீரில் இன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட உள்ளதாக தகவல்! கரணம் இதுதானா?!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசு அரசாணையை வெளியிட்டது. இந்த முடிவு இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் கவனிக்கப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்ற பட்டதால் காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள, சேவை உட்பட தொலை தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது.
இன்று இரவு இந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என கூறப்பட்டு வருகிறது. காரணம் பக்ரீத் பண்டிகை வருவதால், மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.