துரைமுருகன் தமிழக அரசு மீது கடும் விமர்சனம்!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் புதியதாக அமைக்கும் பணிகளை துரைமுருகன் துவங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை, தமிழக அரசு பயன்படுத்தாத தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என கூறினார்.
மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முழுவதும் நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாக திறமையின்மையே காரணம் என்றும், இப்படியே சென்றால் அரசு போக்குவரத்துகழகமே இல்லாத நிலை உருவாகும் எனவும் துரைமுருகன் எச்சரிக்கை செய்தார்.
source: dinasuvadu.com