சுவையான பன்னீர் பக்கோடா செய்வது எப்படி?
நாம் காலையிலும், மாலையிலும் தேநீருடன் சேர்த்து பல வகையான உணவுகளை சாப்பிடுவதுண்டு. ஆனால், நாம் இந்த உணவுகளை கடையில் தான் வாங்கி சாப்பிடுவதுண்டு. அதைவிட நாம் கைகளினால் செய்து சாப்பிடுவது உண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான பன்னீர் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பன்னீர் – 150 கிராம்
- கடலை மாவு – ஒரு கப்
- அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
- ஓமம் – சிறிதளவு
- உப்பு – ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
முதலில் பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இதனுடன் தேவையான தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின், இதில் நறுக்கிவைத்துள்ள பன்னீர் துண்டுகளை முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும். இதனை கொத்தமல்லி, புதினா சட்னியுடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். இப்பொது சுவையான பன்னீர் பக்கோடா தயார்.