ஜம்மு காஷ்மீர் கொடியுடன் , தேசிய கொடி பறந்தது !
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் , லடாக் இரண்டும் யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு இரு அவையிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதாவிற்கு இரு அவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது. மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 61 வாக்குகளும் பதிவாகியது.
மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும் , எதிராக 72 வாக்குகளும் வாக்களித்தனர். இறுதியாக இந்த மசோதா மக்களவையிலும் , மாநிலங்களவைலும் இரண்டிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில் உள்ள தலைமை செயலகத்தில் ஜம்மு காஷ்மீர் கொடியுடன் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை தொடந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது.