கள்ளக்காதலனுடன் அறையில் இருந்த தாயை பூட்டி வைத்த மகள் !
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெல்லை டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இப்பெண்ணின் கணவருக்கு 68 வயதாகிறது.
அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 29 வயது வாலிபர் இவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த வாலிபர் யார் என்றால் இப்பெண்ணின் தம்பியின் நண்பன்.
இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இந்த பெண்ணுக்கு 15 வயதில் மகன் ஒருவர் உள்ளார். கடந்த 4-ம் தேதி மாலை அப்பெண்ணும் , அந்த வாலிபனும் வீட்டில் உள்ள ஒரு அறையில் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தனர்.
இதை பார்த்த அந்த பெண்ணின் மகள் அறையை வெளி பக்கமாக பூட்டி விட்டு பின்னர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த உறவினர்கள் கதவை திறந்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அந்த வாலிபரை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு வந்த அப்பெண் நான் கள்ளக்காதலனுடன் தான் வாழப்போவதாகவும் , அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கூறினார். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது .
அதில் அப்பெண்ணின் தாயுடன் தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் அதனால் தான் தன்னை அவருக்கு திருமணம் செய்து கொடுத்ததாகயும் அப்பெண் கூறினார் மேலும் தன் கணவருடன் வாழ விருப்பமில்லை எனவும், கள்ளக்காதலுடன் பத்து வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
அந்த வாலிபர் மீது யாரும் புகார் கொடுக்காததால் அவரை எச்சரித்து காவல்துறை அனுப்பினர். பிறகு அந்த அப்பெண் கூறுகையில் , நான் வீட்டுக்கு சென்றால் உறவினர்கள் அடித்துக் கொன்று விடுவார்கள் எனவே நான் வீட்டிற்கு செல்லவில்லை என கூறினார்.
இதையடுத்து அப்பெண்ணை மகளிர் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். அப்பெண்ணின் மகளை மேலப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.