அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை- அடுத்தது என்ன…??
சென்னையில் நடந்த அதிமுக கூட்டத்தில் 100 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், சட்டசபை தொடர், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, சட்டசபைக்கு வரும் தினகரனை எதிர்கொள்வது குறிதது ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். தினகரன் பேசும் போது பிரச்னை செய்யக்கூடாது என்று எம்எல்ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.