அயோத்தி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை

Default Image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் சமரசமான தீர்வு காணவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட சமரசக்குழுவை  அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி நில விவகாரம் தொடர்பாக  சமரசக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது .அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண இயலவில்லை அயோத்தி விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட 3 பேர் குழு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ,அயோத்தி ராமர் கோவில் வழக்கு இறுதி விசாரணை 6-ஆம் தேதி தொடங்கப்படும் . நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும்  அறிவித்தார்.இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வில் அயோத்தி வழக்கின் விசாரணை தொடங்கியது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்