ஒரே பேட்டியில் இந்தியன் 2 உருவாவதையும் அதில் நடிப்பதையும் உறுதி செய்த பிரியா பவானிசங்கர்!
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியாபவனிசங்கர் என பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் நேற்று ஒரு பேட்டியில் பிரியா பவானிசங்கர் இந்தியன் 2விற்காக நடந்த ஆடிசனை பற்றி கூறினார். அதில், ‘ நான் ஷங்கர் சார் ஆபிஸிற்கு சென்றேன். அங்கு 2 மணி நேரம் கதை கதாபாத்திரம் பற்றி கூறினார்கள். கேட்டவுடன் இந்த கதையை மிஸ் செய்துவிட கூடாது என முடிவு செய்துவிட்டேன்’ என இந்தியன் 2 உருவாவதையும் அதில் நடிப்பதையும் உறுதி செய்தார்.