காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை கண்டித்து வைகோ ,திருச்சி சிவா உள்ளிட்டோர் கடும் கண்டனம்
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பும் அந்தஸ்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலங்கவையைல் கடும் அமளி ஏற்பட்டுள்ளது .
கடந்து ஒருவரமாகவே காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிகழ்த்து வருகிறது அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் அணுகு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் .
இதனிடையில் இன்று ஜம்மு காஷ்மீர் பற்றி முக்கிய தகவல் வெளியாகலாம் என்றும் இதுகுறித்து உள்த்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா இந்திய அரசியல் சாசனத்தின் .சிறப்பு அந்தஸ்துகள் வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.அது தொடர்பான மசோதாவை அறிமுகம் செய்து ,அதை தாக்கல் செய்தார் அமித் ஷா.
இதனால் கடும் அமளி ஏற்பட்டுள்ளது வைகோ தனது கண்டனத்தை தெரிவித்து கூச்சலிட்டார் இதனைத்தொடர்ந்து வெங்கையாநாய்டு இருக்கையில் சென்று அமருமாறு வைகோவை அறிவுறுத்தினார் .ஆனால் அதை பொருட்படுத்தாமல் திருச்சி சிவா ,வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .
இதில் வைகோ, ‘ காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எமெர்ஜென்சி ( அவசர நிலை ) நிலையை கொண்டுவந்துள்ளதாக கூறினார். ‘ இதற்கு பதில் அளித்த வெங்கயா நாயுடு , ‘ இது அவசர நிலை இல்லை. அவசியமான நிலை என குறிப்பிட்டார்.