என்னடா இது! எல்லாரும் தரையில தான் சைக்கிள் ஓட்டுவாங்க! இவங்க மட்டும் தண்ணீர்ல ஓட்டுறாங்க!
இன்றைய நாகரீகமான உலகத்தய் பொறுத்தவரையில் அனைத்துமே நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. நாம் சைக்கிளில் பயணம் செய்த அனுபவம் எல்லாருக்கும் உண்டு. ஆனால், அனா சைக்கிளை நாம் சாலையில் தான் ஓட்டியிருப்போம். ஆனால், இங்கு எகிப்தில் சைக்கிளை தண்ணீரில் ஓட்டுகிறார்.
எகிப்தில் உள்ள நைல் நதியில், இரண்டு மிதவைக்கு நடுவில் சைக்கிளை பொருத்தி வைத்துள்ளனர். அந்த சைக்கிளை நைல் நதியில் தண்ணீரில் விட்டு, அதனை மிதித்தால், சைக்கிள் நதியில் நகர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எகிப்து ஆற்றில் சைக்கிள் ஓட்டும் இந்த சாகசம், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ஆற்றில் சைக்கிளில் சவாரி செல்ல 30 நிமிடத்திற்கு, இந்திய மதிப்பின் படி 400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், தண்ணீரில் சைக்கிள் ஓட்டும் அனுபவம் கிடைப்பதாக கூறியுள்ளனர்.