கையில் ஓநாய் டாட்டூ ! சைனி பதிலில் உறைந்த ரசிகர்கள் !

Default Image

நேற்று முன்தினம்  புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நவ்தீப் சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சைனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியில் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற காரணம் நவ்தீப் சைனி.இவர் கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் , ஹெட்மயேர் ஆகிய  3 விக்கெட்டை பறித்து 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

மேலும் ஒரு ஓவர் மெய்டன் செய்தார்.போட்டி முடிந்த பிறகு புவனேஷ்வர் குமாரிடம் பேசினார். சைனி தனது  இடது கையில் ஓநாய் பச்சை குத்தியுள்ளார். அதை பற்றி புவனேஷ்வர் கேட்க அதற்க்கு பதில் அளித்த சைனி ,

“ஓநாய் பச்சை  குத்த காரணம் நானும் எனது சகோதரரும் சிறுவயதிலிருந்தே ஓநாய் திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். மற்றொரு காரணம் என்னவென்றால், ஓநாய் ஒருபோதும் சர்க்கஸில் சாகசம் செய்வது இல்லை தனித்துவம் கொண்டவை ”என சைனி புவனேஷ்வரிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்