T20: இன்றைய இரண்டாவது போட்டிலும் இந்திய அணி வெற்றி பெறுமா ?
இந்தியஅணி ,வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து 3 டி -20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டி -20 போட்டிகள் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.
நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 96 ரன்கள் இலக்குடன் களமிறங்கி 17.2 ஓவரில் 98 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.