ஜம்மு காஷ்மீரில் லடாக் திருவிழா! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரம்பரிய லடாக் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த பாரம்பரிய விழாவின் சிறப்பு என்னவென்றால், அப்பகுதியில் நிலவும் புராணங்கள், நீதிக்கதைகளை சித்தரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியினை புத்த துறவிகள் நடத்துகின்றனர். இந்த லடாக் திருவிழாவில் இடம் பெரும் நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து செல்கின்றனர்.