அசத்தலான சில்லி முட்டை செய்வது எப்படி?
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. நம்மில் அதிகமானோர் முட்டையை அவித்தோ அல்லாது பொரித்தோ தான் செய்து சாப்பிடுவதுண்டு.
தற்போது, இந்த பதிவில் அசத்தலான சில்லி முட்டை செய்வதில் எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வேக வைத்த முட்டை – 5
- வெங்காயம் – 2
- இஞ்சி பூண்டு விழுது – இரண்டு ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன்
- புளிக்கரைசல் – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – சிறிதளவு
- மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
- சர்க்கரை – அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் வேக வைத்த முட்டைகளை தோலுரித்து எடுத்து, அவற்றின் மேல் முள் கரண்டியால் குத்தி விட வேண்டும். பின் வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிக்கரைசல், உப்பு போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி, சர்க்கரை, மஞ்சள்தூள், போட்டு கடைசியாக குழம்பில் முட்டைகளை போட வேண்டும். குழம்பு ந ன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைத்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான சில்லி முட்டை தயார்.