ஒரே பள்ளியை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோருக்கு காசநோய் பாதிப்பு! அதிகாரிகள் அதிர்ச்சி!
சுகாதாரத்துறை அதிகாரிகள் தென்மேற்கு ஜெர்மனியின் bad schornborn என்ற பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது, ஒரே பள்ளியை சேர்ந்த 109 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதில் இரண்டு மாணவர்களுக்கு, மற்றவர்களை பாதிக்கும் அளவில் மோசமான காசநோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து அகற்றப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பயிலும் 56 மாணவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்பே இல்லாத மற்ற மாணவர்களுக்கு, இவர்களுக்கு பாடம் எடுக்காத ஆசிரியர்களுக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டிருப்பது அதிகாரிகளை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.