மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த ரவீந்திரநாத் குமார்
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியடைவில்லை.ஆனால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தான் வெற்றிபெற்றது அதிமுக.
இதனையடுத்து அதிமுக சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக பல கோரிக்கைகளை முன் எடுத்து வருகிறார்.அந்த வகையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன், தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் சந்தித்தார்.அப்போது மதுரை – போடி அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்கவும், திண்டுக்கல் – சபரிமலை இடையே புதிய ரயில் திட்டத்தை உடனே தொடங்கவும் கோரிக்கை விடுத்தார்.