உன்னாவ் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம்
உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது .இது தொடர்பாக உன்னாவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ துணை இயக்குநர் சம்பத் மீனா உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதில் சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் விபத்து வழக்கை முடிக்க 30 நாள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 30 நாள் அவகாசம் வழங்க முடியாது, 7 நாட்களில் முடியுங்கள் என்று தெரிவித்தார்.மேலும் உன்னாவ் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம் செய்கிறோம் என்றும் தெரிவித்தார். பின்னர் வழக்கின் விசாரணை இன்று மதியம் 2 மணிக்கு இறுதி உத்தரவை பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்தார்.