ஆவணங்கள் தாமதம் ஆனதால் ஹர்பஜனுக்கு கேல் ரத்னா விருது நிராகரிப்பு !
பஞ்சாப் அரசு சார்பில் கேல் ரத்னா விருதிற்கு ஹர்பஜன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதற்கான ஆவணங்கள் தாமதமாக வந்து அடைந்ததாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் நிராகரித்து உள்ளது. இதனால் ஹர்பஜன் வருத்தமடைந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து ஆவணங்கள் தாமதமான விவகாரத்தில் பஞ்சாப் விளையாட்டு துறை அமைச்சர் ராணா குர்மித் சிங் சோதியிடம் ஹர்பஜன் வலியுறுத்தி உள்ளார்.ஹர்பஜன் கோரிக்கையை ஏற்று கொண்ட குர்மித் சிங் கேல் ரத்னா விருது வழங்க வலியுறுத்தியும் , ஆவணங்கள் தாமதமாக வந்ததற்கான காரணத்தையும் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு விட்டார்.
https://t.co/pG3lRHHqli Rajiv Gandhi Khel Ratna Award: पंजाब सरकार खेल विभाग की लापरवाही पर Harbhajan Singh का बयान
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 30, 2019
இது தொடர்பாக ஹர்பஜன் ட்விட்டரில் ஒரு உருக்கமான விடியோவை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கேல் ரத்னா விருதிற்காக பரிந்துரை ஆவணங்களை பஞ்சாப் அரசு தாமதமாக அனுப்பியதால் மத்திய அரசு நிராகரித்து விட்டது.இதனால் இந்த வருட விருது பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.
மார்ச் 20-ம் தேதியை நான் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டேன்.அந்த ஆவணங்கள் 10-15 நாள்களில் சென்று இருக்க வேண்டும் ஆனால் ஆவணங்கள் செல்லவில்லை.உரிய நேரத்தில் ஆவணங்கள் சென்று இருந்தால் விருது கிடைத்து இருக்கும் .எனக்கு விருது கிடைத்து இருந்தால் மற்ற வீரர்களுக்கு ஊக்கமாக இருந்து இருக்கும்.
இது போன்று நடந்தால் வீரர்களுக்கு சிக்கல் .இந்த வருட தாமதமானதால் எனது பெயரை அடுத்த வருடம் பரிந்துரை செய்யவேண்டும் என கூறினார்.விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு உயரிய விருதான கேல் ரத்னா விருது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரில் 1991-ம் ஆண்டு முதல் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
முதல் விருது செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்திற்கு கொடுக்கப்பட்டது.கிரிக்கெட்டில் சச்சின் , டோனி , விராட் கோலி ஆகியோருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.