சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து!பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு
சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை மண்ணடியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளது.இன்று காலை அங்கு தீ விபத்து ஏற்பட்டது.இந்த அலுவலகத்தில் உள்ள நான்கு தளங்களிலும் தீ பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.மேலும் இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தீவிபத்தில் சர்வர்கள் சேதமடைந்துள்ளதால் சென்னையில் உள்ள திருவெற்றியூர்,துறைமுகம் மற்றும் பூக்கடை பகுதிகளில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.