7 வயது சிறுவனுக்கு 526 பற்கள் இருந்துள்ளது …என்ன நம்ப முடியலயா !

Default Image

சென்னையை சேர்த்த 7 வயது சிறுவன் ஒருவருக்கு 526 பற்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் பிரபுதாஸ். இவரது 7 வயது மகன் ரவீந்திரநாத்.

ரவீந்திரநாத்துக்கு சிறு வயது முதலே வலது கன்னம் சற்று வீக்கமாக இருந்து வந்துள்ளது. 3 வயது இருக்கும் போது சென்னை அரசு மருத்துவமனையில் காட்டியுள்ளார். அப்போது வலி நிவாரிணி மாத்திரை  அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், 7 வயதாகும் போது வலி அதிகமாக இருந்ததால் சென்னை சவிதா பல் மருத்துவமனையில் சிகிச்சைபெற வந்துள்ளனர். அங்கு நடந்த பரிசோதனையில், சிறுவனின் வாயில் குவியல் குவியலாக பற்கள் இருந்தது கண்டுபிடிக்க பட்டுள்ளது. இதையடுத்து 5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் வாயில் இருந்த 526 சிறு பற்கள் அகற்றப்பட்டுள்ளது.

தற்போது அந்த சிறுவனுக்கு 32 பற்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்