இன்று கூடுகிறது புதிய கல்வி கொள்கை கருத்துக் கேட்பு கூட்டம் – திமுக தோழமை காட்சிகள் பங்கேற்கிறது
இன்று நாடாளுமன்றத்தில் கூடும் புதிய கல்விக்கொள்கை மீதான கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்கிறது.
புதிய கல்வி கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாடு முழுவதும் அனைத்து இடங்களுக்கும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 9 ம் தேதி மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் 3 வது எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சார்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்,பி க்கள் கலந்து கொள்ளும் கூட்டம் கருத்து கேட்பு கூட்டம் நாளை நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,திமுக சார்பில் புதிய கல்வி கொள்கையை ஆராய்ந்து மத்திய அமைச்சரிடம் அறிக்கை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.