பந்து என நினைத்து நாட்டு வெடிகுண்டை வைத்து விளையாடிய 2 சிறுவர்கள் காயம் !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நிமிஸ் (8) ,சூர்யா (8) சூரிய இவர்கள் இருவரும் அங்குள்ள ஊருணியில் விளையாடி கொண்டிருந்தபோது உருண்டையான ஒரு பொருள் இருப்பதை பார்த்து இருவரும் அந்த பொருள் பந்து என நினைத்து தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது.
நல்ல வேலையாக தூக்கி எறிந்தபோது மேலே குண்டு வெடித்ததால் அந்த சிறுவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் தூக்கி விளையாடியது நாட்டு வெடிகுண்டு என போலீஸ் விசாரணையில் தெரிந்தது. மேலும் அங்கு தொடர்ந்து நடத்திய சோதனையில் ஒரு வெடி குண்டை கண்டுபிடித்தனர். குண்டு வைத்தது யார் ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!
December 22, 2024![Storm warning cage](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Storm-warning-cage.webp)
“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!
December 21, 2024![BJP State president K Annamalai - TN Minister Ragupathi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/BJP-State-president-K-Annamalai-TN-Minister-Ragupathi.webp)
பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!
December 21, 2024![PMK Uzhavar maanadu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/PMK-Uzhavar-maanadu.webp)
அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!
December 21, 2024![Actor Allu Arjun - Telangana CM Revanth reddy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Actor-Allu-Arjun-Telangana-CM-Revanth-reddy.webp)
பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…
December 21, 2024![Union minister Nirmala Sitharaman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-minister-Nirmala-Sitharaman-1.webp)