சீனாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம்….. இந்தியாவில் புத்தாண்டில் மட்டும் 69,070 குழந்தைகள் பிறப்பு!

Default Image

2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிகஅளவு குழந்தைகள் பிறந்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விடவும், இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் அன்றைய தினம் பிறந்துள்ளன.
சீனாவில் 44,760, நைஜீரியாவில் 20,210, பாகிஸ்தானில் 14,910, இந்தேனேஷியாவில் 13,370, அமெரிக்காவில் 11,280, காங்கோ நாட்டில் 9,400 எத்தியோபியாவில் 9,020, வங்கதேசத்தில் 8,370 குழந்தைகள் பிறந்துள்ளன. உலக நாடுகளில் பிறந்த மொத்த குழந்தைகளில் பாதி, இந்த 9 நாடுகளில் பிறந்துள்ளன. இவற்றில் பல குழந்தைகள் பிறந்த முதல் நாளிலேயே  உயிரிழந்துள்ளன.
Related image

குழந்தைகளின் பிறப்பு ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குழந்தைகளின் இறப்பு விகிதமும் கவலையளிக்கிறது. 2016-ம் ஆண்டு புள்ளி விவரப்படி, ஒரு நாளில், 2,600 குழந்தைகள் வீதம் இறந்துள்ளன. குறிப்பாக பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2016-ம் ஆண்டில், பிறந்த ஒரு மாதத்திலேய இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26 லட்சமாகும்.
இதில், 80 சதவீத குழந்தைகள், குறைப் பிரசவம், உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளன. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இந்த குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு  ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்துள்ளது
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்