அசத்தலான கத்தரிக்காய் ப்ரை செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்தி சமையல் செய்கிறோம். நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தய் பெறுகிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை விடுதலையாக்குகிறது.
தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பெரிய கத்தரிக்காய் – 1
- சிக்கன் 65 மசாலா – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கத்தரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணேய் 2 டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்தரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்க வேண்டும்.
அதன்பின், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான கதத்தரிக்காய் ப்ரை தயார்.