பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பாஜக நிர்வாகிகள் இருவர் இடைநீக்கம் !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டத்தை சார்ந்தது பாஜக தலைவரும் அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அந்த வீடியோவில் இருந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வீடியோவை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய இருவரையும் இடைநீக்கம் செய்து கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தகவலை மாநில பாஜக துணைத் தலைவர் கணேஷ் தெரிவித்தார்.