புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை மத்திய அமைச்சரிடம் வழங்கிய திமுக எம்.பி.க்கள்
திமுக சார்பில் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது .அந்த குழுவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, டாக்டர் ரவீந்திரநாத் உட்பட 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த குழு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சேகரித்த அறிக்கையை அளித்தனர்.இதன் பின்னர் இந்த அறிக்கை மனிதவள மேம்பாட்டு துறைக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று புதிய கல்விக்கொள்கை குறித்த திமுகவின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் திமுக எம்.பி.க்கள் வழங்கினார்கள்.