சமஸ்கிருதம் ஒரு “Dead Language” என வடமாநிலத்தவர்களுக்கும் புரியும்படி சொல்கிறேன்-வைகோ

தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம்  4000 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது.இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.குறிப்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,   சமஸ்கிருதம் என்பது செத்துப்போன மொழி என்று ஆயிரம் முறை கூறுவேன் .சமஸ்கிருதம் ஒரு “Dead Language” என வடமாநிலத்தவர்களுக்கும் புரியும்படி சொல்கிறேன் என்று தெரிவித்தார். தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையானது என்று எழுதியவன் யார்? என்று கேள்வி எழுப்பின்னர்.
 தமிழைவிட சமஸ்கிருதம் பழமையான மொழி என்று அறிவித்தவர் யார் என்பதை கண்டுபிடித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்தார்.