காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம்! கூட்டநெரிசலில் சிக்கிய 33க்கும் அதிகமானோருக்கு தீவிர சிகிச்சை!
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க தினம் தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
1 மணி வரை சுமார் 1.30 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர். தற்போது வரை 33 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வது கூட அந்த கூட்டத்தில் தாமதமாக இருக்கிறது.
இந்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்,’ ஆகஸ்ட் 1 முதல் 20,000 பக்தர்களை நிறுத்திவைத்து, தரிசிக்க அனுமதிக்க உள்ளாதாக, ‘ தெரிவித்தார்.