கிங் ஃபிஷர் நிறுவன சொத்துக்களை தவிர வேறு சொத்துக்களை பறிக்க கூடாது! – விஜய் மல்லையா வழக்கு!

சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார் விஜய் மல்லையா. அதிகமான கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்க, பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்திய அரசு சென்றாண்டு நிறைவேற்றியது.

இதன் படி இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் குற்றியவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்தில் வழக்கு நடந்து வருகிறது. இது சம்பந்தமான வழக்கு இந்தியாவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மல்லையா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது, ‘ நிதி மோசடி குற்றத்திற்கு உள்ளாகி இருக்கும் கிங் ஃ பிஷர் நிறுவன சொத்துக்களை தவிர, வேறு சொத்துக்களை பறிக்க கூடாது.’ என  கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.