“அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டேன்” – துணை சபாநாயகர் ரமாதேவி பேச்சு!

நாடாளுமன்ற மக்களவையில் தண்ணி அவதூறாக பேசிய அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் விட மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகர் ரமாதேவி தெரிவித்துள்ளார்.
கடந்த 25ம் தேதி மக்களவையில் முத்தலாக் தடை மசோதா விவாதம் நடந்தது. சபாநாயகர் இருக்கையில் எம்.பி ரமாதேவி அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி யான அசம்கான் , சபாநாயகரை அவதூறாக பேசினார். இதற்க்கு உடனடியாக பெண்.எம்.பி களான நிர்மலா சீதாராமன், ஷமிருதி ராணி மற்றும் கனிமொழி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அசம்கான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று அவையில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அசம்கான் மீது நடவடிக்கை எடுக்க அனைவரிடமும் கருத்து கேட்க தொடங்கினர். மேலும், அசம்கான் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து, இன்று பேசியுள்ள துணை சபாநாயகர் ரமாதேவி, அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் அவரை மன்னிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது போன்று அவையில் அவதூறாக பேசுவது நாகரிகமற்ற செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025