7 மாத குழந்தையை காப்பாற்ற உயிர்தியாகம் செய்த 5 வயது சிறுமி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் புகைப்படம்!

Default Image

சிரியா இந்த பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது குண்டுகளின் சத்தமும் அலறல் குரல்களும்

சிரியாவில் உள்நாட்டு போர் அதிகரித்ததன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.  அந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்காரவாதிகள் இருப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது.

2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில்  கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில்  சிரியாவில்  ஒரு கட்டிடம் இடிபாடுகளுக்கு இடையில் ஒரு குழந்தையின் கையில் மற்றறொரு குழந்தை  இருக்கும் புகைப்படம் பரவி வருகிறது .அது பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அந்த கோர சம்பவம் புதன் கிழமை நடைபெற்றது. சிரியாவில் உள்ள இட்லி எனும் பகுதியில் உள்ள அரஹா எனுமிடத்தில்  நடந்த குண்டுவெடிப்பில், கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருந்தது. அதில், பிறந்து 7 மாதமே ஆன தனது சகோதரியின் சட்டையை 5 வயது சிறுமி இறுக்கமாக பிடித்து கொண்டு கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்தார்.

இந்த புகைப்படத்தை எடுத்தது, அந்த பகுதியில் உள்ள  எஸ்ஒய் ப்ளஸ் (SY+) பத்திரிக்கையாளர் பாஷர் அல் ஷேக் என்பவராவர்.

அந்த இடிபாடுகளில் சிக்கிய மூன்று சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கையில் ஒருவர் இறந்துவிட,  இரு சிறுமிகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்