5-வது டாக்டர் பட்டம் பெறும் இசைஞானி இளையராஜா!
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இளையராஜாவுக்கு, ஆந்திராவை சேர்ந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில் நேற்று நடைபெற்ற விழாவில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது இசைஞானி இளையராஜாவுக்கு 5-வது டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.