கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் கலந்து கொண்டார்.அங்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அத்திவரதரை தரிசனம் செய்தார் .இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், அனைத்து மதத்தினரும் தங்களது மத கோட்பாட்டை கடைபிடிக்க உரிமை உண்டு.கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.