ஆன்லைன் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு : மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் உத்தரவு
ஆன்லைன் வர்த்தகம் மூலம் கிடைக்கும் பொருட்களில் போலியானவை அதிகம் வருவதால் ஆன்லைனில் விற்கும் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து உள்ளது மத்திய அரசு.
இனி ஆன்லைனில் விற்க்கப்படும் பொருட்களில் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடபட்டிருக்க வேண்டும். மேலும், உற்பத்தி செய்த தேதி, காலாவதி ஆகும் தேதி, உற்பத்தி ஆகும் நாடு, புகார் எண்(கஸ்டமர் கேர்) ஆகிய விவரங்கள் கட்டாயமாக அச்சிடப்பட்டு இருக்கவேண்டும் என மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
source : dinasuvadu.com