நடிகை எலிசபெத் டெய்லர் கார் ரூ.24 கோடிக்கு விற்க திட்டம் !

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தனது அழகால் கவர்ந்தவர். ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர். இவரை லிஸ் டெய்லர் என அழைக்கப்படுகிறார். இவர் ஆங்கிலோ மற்றும் அமெரிக்க நடிகை. அமெரிக்கத் திரைப்படத் துறையில் தலைசிறந்த பெண்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.
இவர் 1961 -ஆம் ஆண்டு எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ஏலத்திற்கு வர உள்ளது.
இந்த காரை 20 வருடங்கள் எலிசபெத் பயன்படுத்தி உள்ளார். இதன் ஆரம்ப விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அந்த காரின் ஆரம்ப விலை 24 கோடி ரூபாய் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது நிலையில் உள்ள காரின் விலையை விட ஐந்து மடங்கு அதிகம்.