முடி கொட்டுவதை நிறுத்த வேண்டுமா ?அப்ப இதை பாருங்க ..!
கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.
முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிய்யக்காய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
சின்ன வெங்காயத்தை செம்பரத்தி பூவுடன் அரைத்து தேய்த்து வந்தால் வழுக்கை தலையில் முடி வளரும்.
பூசணி கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றை முடி விழுந்த இடங்களில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிர்வது நின்று, அடர்த்தியாக வளரும். மேலும் தலை குளிச்சியாகும்.
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராமல் கூந்தல் கருமையாக வளரும்.