முன்னாள் மேயர் கொலை விவகாரம் :எனக்கு எந்த தொடர்பும் இல்லை-திமுக பிரமுகர் விளக்கம்
கடந்த ஜூலை 23-ஆம் தேதி நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மட்டும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். ஆனால் கொலை நடந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் போலீசாரால் எந்த ஒரு தகவலும் முழுமையாக பெறமுடியாத நிலை உள்ளது.
இந்த கொலைக்கு மதுரையை சேர்ந்த திமுக பிரமுகரான சீனியம்மாள் தான் முக்கிய காரணம் என்று தகவல் அதிகம் வெளியாகிவந்தது.மேலும் உமா மகேஸ்வரியை அரசியல் காரணத்திற்காக கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் கொலை தொடர்பாக சீனியம்மாள் பேட்டியளித்தார்.அவர் அளித்த பேட்டியில்,நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் கொலை சம்பவத்தை தெரிந்து கொண்டேன்.என்னிடம் போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.போலீசாரிடம் கொலை சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினேன்.
மேலும் உமா மகேஸ்வரியிடம் பண ரீதியாக ஏதாவது தொடர்பு இருந்ததா என்று போலீசார் கேட்டனர் அதற்கு இல்லை என்று பதிலளித்தேன் என்று கூறினார்.திமுகவிற்கு என்னை வைத்து கேட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.