மனிதர்களால் அழிந்து வரும் சிறுத்தை இனம் ! நான்கு மாதத்தில் மட்டும் 218 சிறுத்தைகள் பலி!
இந்தியாவில் வாழும் வனவிலங்குகளில் பெரும் ஆபத்தில் உள்ள விலங்காக சிறுத்தை மாறி உள்ளது. சிறுத்தைகளுக்கு ஆபத்து விளைவிக்க கூடியவர்களாக மனிதர்கள் தான் உள்ளனர். சிறுத்தைகள் கிராம புறங்களில் நுழைவதால் அங்கு உள்ள மக்கள் நடந்தும் தாக்குதலில் அதிகமான சிறுத்தைகள் இழந்து உள்ளன.
இது குறித்து 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 41 சிறுத்தைகள் ரயிலில் விபத்துகள் மற்றும் சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் இறந்து உள்ளனர்.இதை தொடர்ந்து 2015-ல் 51, 2016-ல் 51 , 2017-ல் 63 , 2018-ல் 80 சிறுத்தைகள் இறந்து உள்ளனர்.
இந்த விபத்துகளில் சிறுத்தைகள் இறந்ததை விட மனிதர்களின் தாக்குதலில் தான் அதிக சிறுத்தைகள் இறந்து உள்ளனர்.கடந்த ஆண்டு மட்டும் 500 சிறுத்தைகள் இறந்து உள்ளது.இதன் மூலம் தினமும் ஒரு சிறுத்தை இழந்து உள்ளது.
கடந்த அண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதைப்படியான சிறுத்தைகள் இறந்து உள்ளது.இந்த வருடம் முதல் நான்கு மாதத்தில் மற்றும் 218 சிறுத்தைகள் இறந்து உள்ளது.இந்த இறப்பு சதவீதம் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இதில் இறந்த பெரும்பாலான சிறுத்தைகள் மனிதர்களின் தாக்குதலில் இறந்து உள்ளது.மீதம் உள்ள சிறுத்தைகள் ரயிலில் விபத்துகள் ,சாலை விபத்துகள் , கிணற்றில் விழுந்து இறந்தவை .இதனால் இந்தியாவில் சிறுத்தை இனம் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.