குழந்தைகளிடம் குறை இருந்தால் அதனை பெரிதுபடுத்தாதீர்கள்! ஊக்கப்படுத்துங்கள்! மக்கள் செல்வன் வேண்டுகோள்!

Default Image

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரசு பள்ளியில் பயின்ற மாணவி, தைவான் நாட்டில் நடந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு, தங்க பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கம் வென்ற ஷெரின் அனிதாவை மனதார பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும் குறிகள் இருந்தால் அதனை பெரிதுபடுத்தாமல், பெற்றோர்களை அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்